சினிமா செய்திகள்

விக்கி கவுசல் நடித்துள்ள 'சாவா' படத்தின் டீசர் வெளியீடு

விக்கி கவுசல் நடித்துள்ள 'சாவா' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பின் கணவர் ஆவார். சமீபத்தில் பிரபல இயக்குனர் ஆனந்த் திவாரி இயக்கத்தில் இவர் 'பேட் நியூஸ்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது, 'சாவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். லக்ஷ்மன் உடேகர் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் டீசரை தயாரிப்பாளர் தினேஷ் விஜன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்