சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் -டி.ராஜேந்தர்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது.

தற்போது ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் சிலர் மீதும் புகார் கூறி உள்ளார். தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் , நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.

இது குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் கூறியதாவது:-

தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது என் மீது இதுவரை ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு, குறிப்பிட்டவர்கள் உரிய விளக்கம் அளித்தால் பிரச்சினைகள் தீரும். பாஜக மிரட்டுகிறது, ஆட்சியை கைப்பற்றவும் திட்டம் தீட்டுகிறது என கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து