சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பீஸ்ட்' இந்தியில் ரீமேக்

பீஸ்ட் படம் திரைக்கு வரும் முன்பே இந்தி ரீமேக் உரிமைக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு உள்ளது. பீஸ்ட் இந்தி ரீமேக் உரிமையை பெற, பிரபல இந்தி தயாரிப்பாளரும், இயக்குனருமான சஜித் நதியத்வாலா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. பீஸ்ட் படம் திரைக்கு வரும் முன்பே இந்தி ரீமேக் உரிமைக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு உள்ளது. பீஸ்ட் இந்தி ரீமேக் உரிமையை பெற, பிரபல இந்தி தயாரிப்பாளரும், இயக்குனருமான சஜித் நதியத்வாலா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பீஸ்ட் விஜய்யின் 65-வது திரைப்படம். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக வருகிறார். இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டோம் சாகோ, ஜான் விஜய், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். பீஸ்ட் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை