சென்னை,
இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில்,
’பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நேரில் வந்திருந்தும், செய்திகள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்து, நாடு முழுவதும் , மாவட்டம் முழுவதும் இருந்து நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.