சினிமா செய்திகள்

'மாமன்னன்' படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் டுவீட்

மாமன்னன் படத்தை வெற்றி பெற செய்த மக்களின் பேராதரவுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாமன்னன் படத்தை வெற்றி பெற செய்த மக்களின் பேராதரவுக்கு  உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாமன்னன் படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும். என தெரிவித்துள்ளார். 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்