சினிமா செய்திகள்

'டியூட்' படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது!

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள “டியூட்” படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான ''ஊரும் பிளட்'' வெளியாகி வைரலானது.அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலான 'நல்லா இரு போ' என்ற பாடல் இன்று மாலை 04.35 மணிக்கு வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...