சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் 2வது பாடல் நாளை வெளியிடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டைரக்டர் சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இதன் முதல் சிங்கிளான அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடல் கடந்த 4ந்தேதி மாலை வெளியானது.

டி.இமான் இசையில் கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது

இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது என படக்குழு தெரிவித்து உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு