சினிமா செய்திகள்

"ஜெயிலர் 2" படத்தின் மூலம் 13 வருடங்கள் கழித்து மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பும் நடிகை

13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார் நடிகை மேக்னா.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ஜெயிலர் 2 படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிரபல கன்னட நடிகையான மேக்னா ராஜ் ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் கடந்த 2010ம் ஆண்டு வெளியான "காதல் சொல்ல வந்தேன்" படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் உயர்திரு 420, நந்தா நந்திதா என மூன்று தமிழ் படங்களில் நடித்தார். 2012ம் ஆண்டு ரிலீஸான நந்தா நந்திதா படத்திற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார் நடிகை மேக்னா. 

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி