சென்னை,
மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் அன்னாராஜன். சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கல் பொங்கல் விழாவில் பங்கேற்று அன்னாராஜன் பொங்கலிட்டார். அவர் பொங்கலிட்ட காட்சிகள் பல்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
அன்னாராஜன் தோற்றத்திற்கு அவருக்கு எதிராக ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். இதனையடுத்து அன்னராஜன் மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் முதன் முதலாக இந்த ஆண்டுதான் அம்மாவின் காலடியில் பொங்கல் வைத்தேன். கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டு அம்மாவின் நாமத்தை உச்சரித்து அந்த தருணத்தை நம்பிக்கையுடன் அனுபவித்தேன்.
புனிதமான தருணத்தில் தேவையற்ற சில வீடியோக்கள் பகிரப்பட்டதை பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது. என் பக்தியை பல்வீனப்படுத்தும் வகையில் என் தோற்றங்கள் வெளியானது. எனது சேலை முக பாவங்கள் ஏதேனும் பக்தர்கள் மனதில் தேவையற்ற வலியை ஏற்படுத்தி இருந்தால் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அம்மாவுக்கு என மனசு தெரியும் என்றார்.