சினிமா செய்திகள்

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு

இயக்குனர் செல்லா அய்யாவு ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷாலுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து கட்டா குஸ்தி 2 எடுக்கவுள்ளனர். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் இசையை ஷான் ரோல்டன் மேற் கொள்கிறார்.

இந்நிலையில், கட்டா குஸ்தி 2 படத்தின் பூஜை நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. அதனை தொடர்ந்து தற்போது, கட்டா குஸ்தி 2 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு வெளியிட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை