சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்..!

கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கார்த்தி நடிக்கும் 25-வது திரைப்படத்தை 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' பட நாயகி அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'ஜப்பான்' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் கார்த்தி டப்பிங் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்