சினிமா செய்திகள்

முழுவீச்சில் நடைபெறும் விஷால் படத்தின் டப்பிங் பணிகள்..!

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக நடிகை ரிது வர்மா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'மார்க் ஆண்டனி' படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்து, விஷால் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி