சினிமா செய்திகள்

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிரபல நடிகை வற்புறுத்தல்

தினத்தந்தி

பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர், சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மராட்டிய மாநிலத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளார்.

இது குறித்து பூமி பட்னேகர் அளித்துள்ள பேட்டியில், "மனிதர்கள் செய்யும் எத்தனையோ பணிகளினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எவ்வளவோ மாற்றங்கள் நடந்து இந்த உலகம் ஆபத்தில் உள்ளது.

மரங்களை வெட்டி விடுவதால் பூமி நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இப்போது அதை தடுக்காவிட்டால் நாம் எதிர்காலத்தில் மேலும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஆபத்து தடுக்கப்பட வேண்டும்.

அதற்கென்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டு ஒவ்வொருவரும் செடிகளை நட வேண்டும், செடிகள் நமக்கு ஆக்சிஜனை கொடுக்கின்றன. அதே செடிகள் இல்லாவிட்டால் நம் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும்? நமது அடுத்த தலைமுறைக்காக சுற்றுச்சூழலை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இது நம் பொறுப்பு. நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு