சினிமா செய்திகள்

தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் 'ஜவான்' திரைப்படம்..!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

தினத்தந்தி

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,117.39 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து