சினிமா செய்திகள்

‘கருப்பு' படம்; இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் கூட்டு சேர்ந்த பால் டப்பா

'கருப்பு' திரைப்படம் வருகிற மே மாதம் 14-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படம் 'கருப்பு'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ரிலீஸ் பல நாட்களாக தள்ளிப்போன நிலையில், வருகிற மே மாதம் 14-ந்தேதி 'கருப்பு' திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்து படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்துடன் பாடலாசிரியர் மற்றும் பாடகர் பால் டப்பாவுடன் எடுத்துக் கொண்ட செல்பியை இணைத்துள்ளார். அதன்படி கருப்பு படத்தின் அடுத்த பாடலையும் பால் டப்பா எழுதி பாடியிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT