சினிமா செய்திகள்

முதல் நாள் வசூலில் இந்திய அளவில் சாதனை படைத்த 'லியோ' திரைப்படம்.!

இந்தாண்டு வெளியான திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை 'லியோ'படைத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் நேற்று வெளியானது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

நேற்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை பார்த்து வருகின்றனர். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் 'லியோ' திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'லியோ' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தாண்டு வெளியான திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை 'லியோ'திரைப்படம் படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்