சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் பெயரை அறிவித்தது படக்குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையக்க உள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று கூறியிருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு 'தங்கலான்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு