சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'வீரன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப் ஹாப் ஆதி 'மீசையை முறுக்கு' படத்தை இயக்கி, கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதி தற்போது 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் 'வீரன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

பேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ளது. இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் பிறந்தநாளான இன்று 'வீரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்