சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'மெரி கிறிஸ்துமஸ்', 'விடுதலை 2', 'மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர், தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு 'டிரெயின்' (Train) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு தெரிவித்து உள்ளது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணையும் 'டிரெயின்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்