சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

நடிகர் தனுஷ் நடிக்கும் 'மாறன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் தனுஷ் நடிக்கும் 43-வது திரைப்படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாபியா, நரகாசுரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.

மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'மாறன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு மாறன் திரைப்படத்தின் 'பொல்லாத உலகம்' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதி நடிகர் தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். 'பொல்லாத உலகம்' வீடியோ பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு