சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'பார்க்கிங்' படத்தின் முதல் பாடல் வெளியானது

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'செல்லக்கள்ளியே' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. சாம் சிஎஸ் எழுதியுள்ள இந்த பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...