சென்னை,
நிர்மல் குமார் இயக்கத்தில் சரத்குமார், சசிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'நா நா'. இந்த படத்தில் பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பகவதி பெருமாள், டெல்லி கணேஷ், ஹரிப்ரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'அண்டா பிண்டா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் 'அண்டா பிண்டா' பாடல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.