சினிமா செய்திகள்

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு

இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் நாளை நவம்பர் 14-ந் தேதி மாலை 7 மணிக்கு ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

தினத்தந்தி

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் நாளை நவம்பர் 14-ந் தேதி மாலை 7 மணிக்கு ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு