சினிமா செய்திகள்

வேட்டையன் படத்தின் முதல் பாடல் தொடர்பான கிளிம்ஸ் வீடியோ வெளியீடு

'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் தொடர்பான கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை படக்குழு பகிர்ந்தது. ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'மனசிலாயோ' பாடலின் கிளிம்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இது குறித்த பதிவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது.

27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக இப்பாடலை படக்குழு வெளியிடவுள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருந்தார் ஏ.ஆர் ரகுமான். 

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை