சினிமா செய்திகள்

படத்துக்கு கதைதான் ஹீரோ - வரலட்சுமி சரத்குமார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் எனது கேரக்டர் பிடித்து இருந்தால் எப்படிப்பட்ட படத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று வரலட்சுமி சரத்குமார் கூறினார்.

தினத்தந்தி

 தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். வில்லி மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ஐதராபாத்தில் வரலட்சுமி அளித்துள்ள பேட்டியில், "எனக்கு அதிகமாக போலீஸ் கதாபாத்திரங்கள்தான் கிடைக்கின்றன. தமிழில் நிறைய படங்களில் அது மாதிரியான வேடங்களில் நடித்து இருக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும். படங்களில் ரசிகர்களுக்கு புதுமையான விஷயங்களை கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

ஒரு படத்துக்கு கதைதான் ஹீரோ என்று நம்புகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் எனது நோக்கம். வரலட்சுமி வித்தியாசமான வேடத்தில் நடித்தார் என்று ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் எனது கேரக்டர் பிடித்து இருந்தால் எப்படிப்பட்ட படத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். பொங்கலுக்கு நான் நடித்த ஹனுமான் படம் ரிலீசாக இருக்கிறது. கன்னடத்தில் சுதீப்புடன் இணைந்து மேக்ஸ் படத்தில் நடிக்கிறேன். மேலும் சில படங்களும் கைவசம் உள்ளன'' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்