சினிமா செய்திகள்

மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்

மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக வேடமேற்று நடித்த பழம்பெரும் நடிகர் குபி பைந்தல் உடல்நல குறைவால் இன்று காலை காலமானார்.

தினத்தந்தி

புனே,

தொலைக்காட்சியில் வெளியான மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக வேடமேற்று நடித்த பழம்பெரும் நடிகர் குபி பைந்தல் (வயது 79). அவர் நீண்டகாலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கடந்த மே 31-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவரது உடல்நலம் குன்றியது.

இதுபற்றிய விவரங்களை அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னணி காமெடி நடிகரான பைந்தல், சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி குபி பைந்தல் காலமானார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

பகதூர் ஷா ஜாபர், மகாபாரதம், கனூன், ஓம் நமசிவாய, சி.ஐ.டி., ஷ்...கோய் ஹை, துவாரகதீஷ் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ராதாகிருஷ்ணர் மற்றும் ஜெய் கனியா லால் கி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார்.

அவர் 1975-ம் ஆண்டு ரபூ சக்கார் என்ற திரைப்படத்தில் முதன்முறையாக நடித்து பிரபலம் ஆனார். அதன்பின்னர், தில்லாகி, தேஷ் பரதேஷ் மற்றும் சுஹாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். கடைசியாக ஜெய் கன்னையா லால் கி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் நடித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்