சினிமா செய்திகள்

நடிகர் அர்ஜுனின் மாமனாரான பழம்பெரும் நடிகர் காலமானார்

நடிகர் அர்ஜுனின் மாமனாரான பழம்பெரும் நடிகர் காலதபஸ்வி ராஜேஷ் காலமானார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கன்னட திரையுலகில் புகழ் பெற்ற பழம்பெரும் நடிகர் காலதபஸ்வி ராஜேஷ். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 1932ம் ஆண்டு ஏப்ரல் 15ந்தேதி பிறந்த ராஜேஷின் இயற்பெயர் முனி சவுடப்பா.

அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வமுடன் இருந்துள்ளார். இதன்பின் 1960ம் ஆண்டில் திரை துறையில் நுழைந்து 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

இவரது மகள் ஆஷா ராணியும் நடிகை ஆவார். ராஜேஷ், கன்னட மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அர்ஜுன் சர்ஜாவின் மாமனார் ஆவார். இந்நிலையில், கடந்த 9ந்தேதி உடல்நலம் பாதித்த அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சுவாச மற்றும் வயது முதிர்வு கோளாறுகள் காணப்பட்டன.

இந்நிலையில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று காலை உடல்நிலை பாதிப்படைந்தது. இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 89. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்