சினிமா செய்திகள்

'யானை' படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ..!

'யானை' படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'யானை'. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், 'குக் வித் கோமாளி' புகழ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் 'யானை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்களை தொகுத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு