சினிமா செய்திகள்

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'லத்தி' திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் இயக்குனர் செல்வராகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்