சினிமா செய்திகள்

நடிப்பை அழகாக அளவாக வெளிப்படுத்தியுள்ளார் - எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிரபல இயக்குனர் பாராட்டு

'வதந்தி' வெப் தொடர் குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'வதந்தி' வெப் தொடர் குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'வதந்தி' வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா சார் மிக சிறப்பான நடிப்பை அழகாக அளவாக வெளிப்படுத்தியுள்ளார்.

லைலா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை