சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் படத்தின் வெற்றி... மாலை அணிவித்து நடிகர் தனுஷை வாழ்த்திய தயாரிப்பாளர்...!

முதல் காட்சியில் கேப்டன் மில்லர் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' தர சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில் கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. முதல் காட்சியில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தினார். இது குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சத்ய ஜோதி பிலிம்ஸ்' தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், 'வின்னர் வின்னர் கேப்டன் மில்லர்... உலகம் முழுவதும் இந்த பிளாக்பஸ்டர் வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து