சினிமா செய்திகள்

விஜய், பவதாரிணி குரலில் 'கோட்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இன்று நடிகர் விஜய் தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து 'கோட்' படத்தின் ஷார்ட்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது 'கோட்' படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சின்ன சின்ன கண்கள்' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்