சினிமா செய்திகள்

மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை

இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கும் பிரபல இந்தி நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் இருவரும் தற்போது சமரசம் ஆகி ஒன்று சேர்ந்துள்ளனர். ஷெர்லின் சோப்ராவிடம் ராக்கி சாவந்த் மன்னிப்பு கேட்டார்.

தினத்தந்தி

தமிழில் கம்பீரம், சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடித்துள்ள ராக்கி சாவந்த் இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். 2019-ல் ரித்தேஷ் என்பவரை மணந்து சில வருடங்களில் பிரிந்தார்.

அதன்பிறகு அதில் கான் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக வலைத்தளத்தில் தெரிவித்து திருமண புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அதில் கான் துரானி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தனது நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்வதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராக்கி சாவந்துக்கும் பிரபல இந்தி நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசினர். இதையடுத்து ஷெர்லின் போலீசில் அளித்த புகாரின் பேரில் ராக்கி சாவந்தை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இருவரும் தற்போது சமரசம் ஆகி ஒன்று சேர்ந்துள்ளனர். ஷெர்லின் சோப்ராவிடம் ராக்கி சாவந்த் மன்னிப்பு கேட்டார். இருவரும் கட்டிப்பிடித்து நண்பர்களான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். சிறிய பிரச்சினையால் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இப்போது மீண்டும் தோழிகளாகி விட்டோம்'' என்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை