சினிமா செய்திகள்

விக்ரம் நடிக்கும் 'மகான்' படத்தின் பாடல் வெளியானது..!

நடிகர் விக்ரம் நடிக்கும் 'மகான்' திரைப்படத்தின் எவன்டா எனக்கு கஸ்டடி என்ற பாடல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மகான்'. இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேலும் மகான் திரைப்படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மகான்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மகான் திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. 'எவன்டா எனக்கு கஸ்டடி' என்ற அந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது