சினிமா செய்திகள்

புதிய போஸ்டரை வெளியிட்டு கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இந்தியன் 2 படக்குழு...!

இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு இந்தியன் 2 சார்பில் மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில், 'நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு