சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் 'பகாசூரன்' படத்தின் டீசர்

'பகாசூரன்' படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது

சென்னை,

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் இயக்கிய மோகன் ஜி. புதிதாகஇயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நமது அடுத்த தலைமுறையை பாதுகாப்போம். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...