சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் டீசர் வெளியானது

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெய்பீம். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு