சென்னை,
’போர்க்களம் கடினமாக இருந்தால் வெற்றியும் பிரமாண்டமாக இருக்கும்’ என 'ஜனநாயகன்' படக்குழு பதிவிட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.
முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சென்சார் பிரச்சினையால் தள்ளிப்போனது. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது.
இதையடுத்து, சமீபத்தில் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ’போர்க்களம் கடினமாக இருந்தால் வெற்றியும் பிரமாண்டமாக இருக்கும்’ என்ற பதிவையும் படக்குழு பகிர்ந்துள்ளது.