சினிமா செய்திகள்

“தி பேமிலி மேன் 3” வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது!

‘தி பேமிலி மேன் 3’ வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர், தி பேமிலி மேன். ராஜ் மற்றும் டீகே இயக்கிய இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசன் 2021-ம் ஆண்டு வெளியானது. அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் சமந்தாவும் நடித்திருந்தார். இதுவும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரிலும் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் மற்றும் டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்.

தி பேமிலி மேன் 3 வெப் தொடர் நவம்பர் 21ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

View this post on Instagram

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து