சினிமா செய்திகள்

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'அநீதி' படத்தின் டிரைலர் வெளியானது..!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'அநீதி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'வெயில்', 'அங்காடித்தெரு', 'அரவாண்', 'காவியத்தலைவன்', 'ஜெயில்' ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்ததாக 'அநீதி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'அநீதி' திரைப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு