சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷ் நடிக்கும் 'வாத்தி' திரைப்படத்தின் டிரைலர் இன்று (புதன்கிழமை) மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...