சினிமா செய்திகள்

பராசக்தி படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பராசக்தி படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான அடி அலையே , 2வது பாடலான ரத்னமாலா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், பராசக்தி படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.