சினிமா செய்திகள்

பிரஜின் நடித்துள்ள 'டி3' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் பிரஜின் நடித்துள்ள 'டி3' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'டி3'. இந்த படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்சன்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரே நாளில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் பிரஜின் போலீசாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நவம்பர் மாதத்தில் 'டி3' திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது