சென்னை,
'சிவகுமாரின் சபதம்' திரைப்படத்திற்குப் பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள திரைப்படம் 'அன்பறிவு'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா பரதேசி, சசிகுமார், ஆஷா சரத், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். மதுரையில் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை மனிதர்களுக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பை எடுத்துக்கூறும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்பறிவு திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. அன்பறிவு திரைப்படத்தில் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அன்பறிவு திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.