சினிமா செய்திகள்

விதார்த் நடித்துள்ள 'லாந்தர்' படத்தின் டிரைலர் வெளியானது

'லாந்தர்' திரைப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எம் சினிமா புரொடக்சன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ். பிரவீன் இசையமைத்துள்ளார். ஞானசவுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விதார்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'லாந்தர்' திரைப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு