சினிமா செய்திகள்

விஷால் கதாநாயகனாக நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரத்னம் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது ரத்னம் படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் வரும் 26ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது