சினிமா செய்திகள்

சத்யராஜ், வசந்த்ரவி நடித்துள்ள 'வெப்பன்' படத்தின் டிரைலர் வெளியானது

'வெப்பன்' திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'. இந்த படத்தில் தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், ராஜிவ் மேனன், ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, 'வெப்பன்' படத்தில் நடித்துள்ளார்.

குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'வெப்பன்' திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்