சங்கம், அர்த்தவம், சாணக்கியம், உத்தமன், சிட்டி போலீஸ், மகாநகரம், பரம்பரா, கலிகாலம், கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 65-க்கும் மேற்பட்ட படங்களில் மலையாள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பி.சி.ஜார்ஜுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஜார்ஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.