சினிமா செய்திகள்

சினிமாவில் இன்னமும் நிற வேறுபாடு பிரச்சினைகள் இருக்கிறது - நிவேதிதா சதீஷ்

'கேப்டன் மில்லர்' படத்துக்கு பிறகு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நிவேதிதா சதீஷ் கூறியுள்ளார்.

விஜய் ரங்கநாத் இயக்கம் - தயாரிப்பில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஓ பட்டர் பிளை' திரைப்படம் வருகிற 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த பட விழாவில் நிவேதிதா சதீஷ் பேசுகையில், 'கேப்டன் மில்லர்' படத்துக்கு பிறகு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவுக்கு நாம் 'செட்' ஆகமாட் டோம் என்று ஒதுங்கிப் போக யோசிக்கும் சூழலில், 'ஓ பட்டர்பிளை' வாய்ப்பு வந்தது.

படப்பிடிப்பு தொடங்கும் சூழலில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை வரைக்கும் சென்றேன். ஆனாலும் எனக்காக படப்பிடிப்பை தள்ளி வைத்து என்னை நடிக்க செய்தனர். சினிமாவில் இன்னமும் நிற வேறுபாடு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. அதுபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நிறைய படங்களில் இந்த பிரச்சினை நடக்கிறது” என்றார்.