சினிமா செய்திகள்

காதலுக்கு வயது தடையில்லை - நடிகை ராஷ்மிகா

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த டியர் காம்ரேட் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.

தினத்தந்தி

தற்போது தெலுங்கில் புஷ்பா, இந்தியில் மிஷன் மஷ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகா கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் உங்களை விட வயது குறைந்த இளைஞரை காதலிப்பீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து ராஷ்மிகா கூறும்போது, நம்மை விட வயது குறைந்தவரை காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது?. காதலுக்கு வயது என்பது தடை இல்லை. மொழியும் தடை இல்லை. காதலிப்பவர் உங்களைப் பற்றி நன்றாக உணர வேண்டும், அந்த நபர் உங்களை மாற்ற முயற்சிக்கக்கூடாது. உங்களிடம் ஆதிக்கம் செலுத்தாதவராக இருக்க வேண்டும்'' என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்